ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா உறுதி: மின்வாரிய அலுவலகம் மூடல்

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் மின்வாரிய அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் ஊழியர்கள் 2 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மின்வாரிய அலுவலகம் நேற்று தற்காலிகமாக

மூடப்பட்டது. தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள், அந்த அலுவலகத்தில் கிருமி நாசினி தெளித்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக காஞ்சிபுரம் நகராட்சியில் கடந்த 8 நாட்களாக தொடர்ந்து 150க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருவதால், பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் காஞ்சிபுரம் நகராட்சியில் மட்டும் நேற்றைய

நிலவரப்படி பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தது.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 86 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். 360 பேர் பாதிப்படைந்துள்ளனர். ஏற்கனவே 7521 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று 360 பேருக்கு உறுதியானது. இதனால், பாதிப்பு

எண்ணிக்கை 7521 ஆக உயர்ந்துள்ளது. மாமல்லபுரம்: கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், கொரோனா சிறப்பு மருத்துவ முகாம் மாமல்லபுரம் அம்பேத்கர் தெருவில் உள்ள சமுதாய கூடத்தில் நேற்று நடந்தது. திருக்கழுக்குன்றம் வட்டார மருத்துவ அலுவலர் கவிதா தலைமையில் சுகாதார குழுவினர் மருத்துவ பரிசோதனைகளை செய்து, பொதுமக்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கினர். இதில், 100க்கும் மேற்பட்ட பொதுமக்களை பரிசோதனை செய்து, ரத்த மாதிரிகளை கிண்டி ஆய்வகத்துக்கு அனுப்பினர். மாமல்லபுரம் செயல் அலுவலர் (பொறுப்பு) கணேசன், துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, துப்புரவு மேற்பார்வையாளர் தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மருத்துவ முகாம் வரும் 31ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.

Related Stories: