சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் 82வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பிரதமர், கவர்னர், முதல்வர், தமிழக எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தொலைபேசி மற்றும் டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது குறித்து பாமக தலைமை வெளியிட்ட அறிக்கை: பாமக நிறுவனர் ராமதாஸ் 82வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி தலைவர் ஆனைமுத்து, பாஜக தலைவர் எல்.முருகன், சமக தலைவர் சரத்குமார், காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர், திமுக எம்.பி ஜெகத்ரட்சகன், பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்,