கந்த சஷ்டி விவகாரத்தில் நடிகர் ரஜினி முன்கூட்டியே கருத்து தெரிவித்திருக்கவேண்டும்: பாஜ மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி

சென்னை: திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான பிரமிடு நடராஜன், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதியின் ஆலோசகராக இருந்த அம்பேத்ராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கபிலன், அண்ணாவின் உறவினரான அருணா ரவிக்குமார், டாக்டர் டெய்சி சரன், தொழிலதிபர் மைதிலி, அருந்ததியர் முன்னேற்ற சங்க பிரமுகர் கேசவராஜ் உள்பட நிர்வாகள் பாஜவில் இணையும் நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.

மூத்த தலைவர் இல.கணேசன், மாநில துணைத் தலைவர் எம்.என்.ராஜா, மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம், பொதுச்செயலாளர் கரு நாகராஜன், ஊடக தொடர்பு பிரிவு தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்பட நிர்வாகள் உடனிருந்தனர். இதையடுத்து எல்.முருகன்  நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ‘கந்த சஷ்டி விவகாரத்தில் நடிகர்கள் சரத்குமார், ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளனர். மற்றவர்கள் ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என்று தெரியவில்லை. இந்த விவகாரத்தில் ரஜினிகாந்த் முன்கூட்டியே கருத்து தெரிவித்திருக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: