டெல்லியில் நோயாளிக்கு தானே ரத்த தானம் செய்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவருக்கு குவியும் பாராட்டுக்கள்

டெல்லி: டெல்லியில் நோயாளிக்கு ஜூனியர் மருத்துவர் ஒருவர் ரத்த தானம் செய்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட சம்பவம் பாராட்டுக்களை பெற்றுள்ளது. டெல்லியில் விபத்தை சந்தித்த ஒருவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள அவசரமாக ரத்தம் தேவைப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் எத்தனையோ இடங்களில் அலைந்தும் ரத்தம் கிடைக்கவில்லை. குடும்பத்தினரின் துயரத்தை அறிந்த எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜூனியர் மருத்துவராக பணிபுரியும் 24 வயதான ஃபவாஸ் உதவிக்கரம் நீட்டியுள்ளார். நோயாளியின் உயிரைக் காப்பாற்ற தானாக முன்வந்து ரத்த தானம் செய்துள்ளார்.

நோயாளிக்கு அவசரமாக ரத்தம் தேவைப்பட்டதால் தானே ரத்த தானம் செய்ததாக கூறியுள்ளார். ஒரு மருத்துவராக தனது கடமையை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ரத்த தானம் செய்த பிறகு ஃபவாஸ் உள்ளிட்ட மருத்துவர்கள் குழு நோயாளிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். நோயாளிக்கு தானே ரத்த தானம் செய்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Related Stories: