ஆகஸ்ட் 19ம் தேதி வக்பு வாரிய உறுப்பினர் தேர்தல்: தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளர் சந்திர மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தல் ஆகஸ்ட் 19ம் தேதி நடைபெறவுள்ளது. தபால் மூலம் தங்கள் வாக்கை பதிவு செய்ய விரும்புகின்ற வாக்காளர்கள் (முத்தவல்லிகள்) வக்பு கண்காணிப்பாளர் அலுவலகங்களிலிருக்கும் இணைப்பு-IIல் குறிப்பிட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து, மண்டல வக்பு கண்காணிப்பாளர்களிடம் ஆகஸ்ட் 8ம் தேதி மாலை 5 மணி வரை தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோஅனுப்ப வேண்டும். தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாக்குச் சீட்டு வாக்காளர்களுக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட தபால் ஓட்டுகள் தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் போடலாம் அல்லது தபால் மூலமாக தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு ஆகஸ்ட் 19 காலை 10 மணிக்குள் சேரும் விதமாக அனுப்ப வேண்டும். தபால் ஓட்டு பெறுவதற்கான விண்ணப்பத்தை தேர்தல் நடத்தும் அதிகாரி அல்லது மண்டல வக்பு கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9 அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Related Stories: