உச்ச நீதிமன்றத்தில் நேரடி விசாரணை சாத்தியம் இல்லை: தலைமை நீதிபதி திட்டவட்டம்

புதுடெல்லி: கொரோனா நோய் தொற்று பரவல் அச்சம் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் தேசிய அளவிலான ஊரடங்கு தொடங்கியது. இதற்கு ஓரிரு நாட்கள் முன்பிருந்தே உச்ச நீதிமன்றத்தில், நேரடி விசாரணைகள் நிறுத்தப்பட்டன. வீடியோ கான்பரன்சிங் மூலமாக வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், பல்வேறு மாநிலங்களில் எஸ்சி, எஸ்டி ஊழியர்களுக்கு பதவி உயர்வு ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான மனுக்கள் உள்ளதால் அவற்றை விசாரிப்பதற்காக உச்ச நீதிமன்றம் நேரடி வழக்கு விசாரணையை தொடங்க வேண்டும் என்று நேற்று வழக்கறிஞர் ஒருவர் வலியுறுத்தினார். தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே தலைமையிலான அமர்வு இது குறித்து நேற்று கூறுகையில், “தற்போது கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல் உள்ள நிலையில் வழக்குகளை நேரடியாக விசாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, நான்கு வாரங்களுக்கு பின் நேரடி வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்குவது குறித்து பரிசீலனை செய்யும்,” என்றனர்.

Related Stories: