அரசியலில் ஆர்வம் இருந்தால் காக்கி சட்டையை கழற்றி விடுங்கள்: ஆந்திர போலீசுக்கு ஐகோர்ட் கண்டிப்பு

திருமலை: ஆந்திரா மாநிலம்,, கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் வக்கீல் சுபாஷ் சந்திரபோஸ். இவரை ஒரு வழக்கு தொடர்பாக கடந்த வாரம் போலீசார் நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்தனர். இது குறித்து வக்கீலின் மனைவி ஆந்திர உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம்  நடந்தது. அப்போது நீதிமன்றத்தில் மாவட்ட எஸ்பி நயீம் அஸ்மி ஆஜரானார். அவரிடம் நீதிபதிகள், ‘‘எந்தவித ஆதாரமும் இல்லாமல் நள்ளிரவில் ஒரு வீட்டிற்குள் நுழைவது ஏன்? அவ்வாறு செய்ய ஏதேனும் நிபந்தனைகள் உள்ளதா? மக்களை பாதுகாக்கவே காவல்துறை உள்ளது. போலீசார் அரசியல் அழுத்தங்களுக்காக அடிபணியக் கூடாது.  அப்படி, அரசியல் அழுத்தங்களுக்காக செயல்பட நினைத்தால் காக்கிச்சட்டையை கழற்றிவிட்டு வேறு சட்டையை அணிந்து கொள்ளலாமே?,’’ என கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இது குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: