டெல்லி : கொரோனா பேரிடர் காலக்கட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் சாதனைகள் என்று நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியையும் ராஜஸ்தான் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியையும் குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கிண்டலடித்துள்ளார். கொரோனா காலத்தில் சரியான திட்டமிடல் இல்லாமல், மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று அவ்வப்போது ராகுல் காந்தி ட்விட்டரில் மோடி அரசை விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் நடப்பாண்டில் மோடி அரசின் சாதனைகளை ஹிந்தி மொழியில் கேலித்தொனியில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார். மேலும் இந்தச் சாதனைகளால் கொரோனா பெருந்தொற்றில் இந்தியா ‘தற்சார்பு’ எய்தியுள்ளது என்று கடும் கிண்டலை வீசியுள்ளார்.