விஷ சாராயம் தயாரிக்க பயன்படும் மெத்தனாலை சட்டத்திற்கு புறம்பாக யாரும் விற்பனை செய்யக்கூடாது : மருத்துவத்துறை எச்சரிக்கை

சென்னை : விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை தொடர்ந்து, தற்போது கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே மது பிரியர்கள் குடித்த அந்த சாராயத்தில் அதிகப்படியான அளவு மெத்தனால் கலந்து இருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் சட்டவிரோதமாக மெத்தனால் விற்கப்பட்டதும் அம்பலம் ஆகி உள்ளது. தமிழகத்தில் இருந்து மெத்தனால் கிடைத்ததா அல்லது அண்டை மாநிலமான புதுச்சேரியில் இருந்து மெத்தனால் கிடைத்ததா என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனிடையே கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு தொடர்பான விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி. விசாரணை அதிகாரி சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையில் 5 குழுக்கள் விசாரணையை தொடங்கின.

இந்த நிலையில், விஷ சாராயம் தயாரிக்க பயன்படும் மெத்தனாலை சட்டத்திற்கு புறம்பாக யாரும் விற்பனை செய்யக்கூடாது என்று மருத்துவத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுவாக மருத்துவமனை மற்றும் தொழிற்சாலை ஆகியவற்றிற்காக மெத்தனால் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த வகையில் மருத்துவமனைக்காக மெத்தனால் பெறப்பட்டு, அது சட்டத்திற்கு புறம்பாக மருத்துவ காரணம் இல்லாமல் விற்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாவட்ட வாரியாக மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் மெத்தனால் தயாரிக்கும் தொழிற்சாலைகள் விற்பனை செய்த் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சட்டவிரோதமாக நடைபெறும் மெத்தனால் உற்பத்தி, விற்பனையை கண்காணிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.

The post விஷ சாராயம் தயாரிக்க பயன்படும் மெத்தனாலை சட்டத்திற்கு புறம்பாக யாரும் விற்பனை செய்யக்கூடாது : மருத்துவத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: