ஸ்ரீபெரும்புதூரில் நடைபெறும் ஏரிகள் குடிமராமத்து பணிகள்: தலைமை பொறியாளர் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் நடைபெறும் ஏரிகள் குடிமராமத்து பணியை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார். ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள நீர்பாசன ஏரிகள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரி மதகு, கலங்கல், கரை, வரவுக் கால்வாய் சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் குண்டுபெரும்பேடு ஏரி ரூ.89.26 லட்சம், கொளத்தூர் ஏரி ரூ.47.64 லட்சம், அக்கமாபுரம் ஏரி ரூ.57.61 லட்சம், வடமங்கலம் ஏரி ரூ.52.59 லட்சம், காந்தூர் ஏரி ரூ.49.66 லட்சம், எறையூர் ஏரி ரூ.39.07 லட்சம், ஏகனாபுரம் ஏரி ரூ. 44.65 லட்சம், வெங்காடு ஏரி ரூ.43.67 லட்சம் மதிப்பில் ஏரி மதகு, கலங்கல், கரை, வரவுக் கால்வாய் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.

இந்த ஏரிகளில் இருந்து சுமார் 1000 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. இந்நிலையில் வெங்காடு, கொளத்தூர், மாகாண்யம் ஏரிகள் சீரமைப்பு பணிகளை பொதுப்பணித்துறை திட்டம் வடிவமைப்பு ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதாரம் தலைமை பொறியாளர் தனபால் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பொதுப்பணித்திலகம், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், ஸ்ரீபெரும்புதூர் கோட்ட பொதுப்பணித்துறை இளம்பொறியாளர் மார்கண்டன் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் பணிகளை விரைவாகவும், தரமாக செய்ய வேண்டும் என்று விவசாய சங்க நிர்வாகிகளிடம், அதிகாரிகள் வலியுறுத்தினர். இதில் விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள் பலர் உடன் இருந்தனர். 

Related Stories: