குடிமகன்களுக்கு தொற்று பரவலை தடுக்க டாஸ்மாக்கில் வேப்பிலை

திருவள்ளூர்: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு விழிப்புணர்வு பணிகளோடு, ஊரடங்கையும் அரசு அமல்படுத்தி உள்ளது. கிராமங்களிலும், ஊராட்சி நிர்வாகம் தரப்பில், கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இந்நிலையில், கோடை காலத்தில், அம்மை நோய் தாக்குதல் ஏற்படும் வீடுகளையும், பாதித்தவர்களையும், தனிமைப்படுத்துவது வழக்கம். அந்த வீட்டுக்கு யாரும் செல்லக்கூடாது என்பதற்காக வீட்டின் முன்பு, மஞ்சள் கலந்த தண்ணீரை, குடங்களில் நிரப்பி, அதில் வேப்பிலை சொருகி வைப்பார்கள்.

இந்த நடைமுறையை தற்போது, கொரோனா தடுப்புக்காக, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பல்வேறு துறை அதிகாரிகள் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு, வேப்பிலையை மஞ்சள் கலந்த நீரில் சொருகி கலெக்டர் உட்பட பல துறை அதிகாரிகள் தங்களது மேசை மீது வைத்துள்ளனர். இதைக்கண்ட டாஸ்மாக் ஊழியர்கள், தாங்கள் பணிபுரியும் கடைகளில், மது வாங்க வரும் குடிமகன்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க, தினமும் மஞ்சள் நீரை கடை முன் அடிக்கடி தெளிப்பதோடு, வேப்பிலைகளையும் செருகி வைத்து பாரம்பரிய முறைகளை பயன்படுத்தி வருகின்றனர். 

Related Stories: