கோபியில் கட்டுப்பாட்டு மண்டலத்தில் பொதுமக்கள் போராட்டம்: உணவு, குடிநீர் கூட விநியோகிக்கவில்லை என குற்றச்சாட்டு

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வீதிகளில் உள்ளவர்களுக்கு அடிப்படை வசதி கிடைக்கவில்லை எனக்கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோபிச்செட்டிபாளையத்தில் குப்பாண்டவர் வீதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து ஆண்ட வீதி இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக வீதியில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனவும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் களைந்து சென்றனர்.

கோபிச்செட்டிபாளையத்தில் இதுவரை 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஈரோடு மாவட்டத்தில் படிப்படியாக கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நேற்று புதிதாக 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் ஈரோடு அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால், அந்த மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: