பாவேந்தரின் 133வது பிறந்த நாள் மதுரையில் 29ம்தேதி தமிழ்க்கவிஞர் நாளாக கொண்டாட்டம்

சென்னை: தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பாவேந்தரின் 133வது பிறந்த நாள் நிகழ்வு தமிழ்க் கவிஞர் நாளாக வரும் 29ம்தேதி காலை 10.30 மணிக்கு மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாக அரங்கில் நடைபெறவுள்ளது.
தொடக்க விழாவில், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் அவ்வை அருள் நோக்கவுரை ஆற்றுகிறார். இந்நிகழ்விற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையுரை வழங்கவுள்ளார். பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் தலைமையில் ‘பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தமிழ் உணர்வே, சமுதாய உயர்வே’ என்ற தலைப்பில் பட்டிமன்றமும் புலவர் செந்தலை கவுதமன் தலைமையில் ‘பாவேந்தர் கண்ட படைப்புக்களங்கள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து, முனைவர் சந்திர புஸ்பம் இசையரங்கமும், கவிஞர் நெல்லை ஜெயந்தா தலைமையில் ‘பாவேந்தரின் பார்வைகள்’ என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெறவுள்ளது.

The post பாவேந்தரின் 133வது பிறந்த நாள் மதுரையில் 29ம்தேதி தமிழ்க்கவிஞர் நாளாக கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: