தொழில் நுட்ப கோளாறால் 2வது அணுஉலை உற்பத்தி நிறுத்தம்

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலைய வளாகத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம், சென்னை அணுமின் நிலையம் உள்பட பல்வேறு பிரிவுகள் கடந்த 37 ஆண்டுகளுக்கு மேலாக இயங்குகின்றன. இங்கு 2 அணு உலைகளிலும் உற்பத்தியாகும் மொத்தம் 440 மெகாவாட்  மின்சாரம் மத்திய தொகுப்பிற்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு அதிகளவு சதவீதமும், மீதம் மாநில வாரியாகவும் பிரித்து பகிர்ந்து அளிக்கப்படுகிறது. கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 1வது அணு உலையில் பழுது ஏற்பட்டு நிறுத்தப்பட்டது. அப்போது முதல் இதுவரை அந்த 1வது அணு உலை சரி செய்யவில்லை. இதனால், 220 மெகாவாட் மின்சாரம் இழப்பு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், இதுவரை இயங்கி வந்த 2வது அணு உலையும் தொழில்நுட்ப கோளாறால் நேற்று நிறுத்தப்பட்டது.

Related Stories: