ரயில்வே மருத்துவமனை கொரோனா வார்டுக்கு சுழற்சி முறையில் பணிக்கு வரும் செவிலியர்களால் தொற்று ஆபத்து

மதுரை: மதுரை ரயி்ல்வே மருத்துவமனையில் கொரோனா  வார்டில் பணி செய்யும் செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள், கெரோனா வார்டில் பணி முடிந்தவுடன், தங்கள் வீடுகளுக்கு செல்லவேண்டும் என்றும், அடுத்தநாள், அவரவர் பணிபுரியும் டிஸ்பென்சரிகளுக்கு சென்று பணி செய்ய வேண்டும் என்றும் இ.எஸ்.ஐ.நிர்வாகம்  வலியுறுத்தி உள்ளது. இதனால், கொரோனா  பரவும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. மதுரை ரயில்வே மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டில், தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்ட போலீசாரும், ரயில்வே ஊழியர்களும் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

இந்த வார்டில் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்துவமனைகளில் (டிஸ்பென்சரிகள்) பணிபுரிந்துவரும், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் ஷிப்ட் முறையில் பணியில் உள்ளனர். ஷிப்ட் முறையில் கொரோனா வார்டில்  பணிபுரியும் செவிலியர்ள் மற்றும் ஊழியர்கள் பணி முடிந்தபின், தங்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டு, அடுத்த நாள், அவரவர்கள் பணிபுரியும் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளுக்கு பணிக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். இப்படி, கொரோனா வார்டில் பணி செய்துவிட்டு,  அன்றைய தினமே வீடுகளுக்குச் செல்வதால், வீட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினருக்கு கொரோனா பரவும் வாய்ப்பு உள்ளது.

அடுத்தநாள், அவரவர்கள் பணிபுரியும் மருத்துவமனைகளுக்கு செல்வதால், அங்கு சிகிச்சைக்காக வருபவர்களுக்கும் இந்த கொரோனா தொற்று பரவும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. எனவே, கொரோனா வார்டில் பணியாற்றும் செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை அன்றைய தினமே வீட்டுக்கு அனுப்பாமல், அவர்களுக்கு தொடர்ந்து 7 நாட்கள் பணியும், 7 நாட்கள் தனிமையும் வழங்க இ.எஸ்.ஐ. நிர்வாகம் முன்வர வேண்டும் என்ற கோரிக்ைக வலுத்துவருகிறது. 

Related Stories: