மத்திய அரசின் மோசமான பொருளாதார மேலாண்மை, லட்சக்கணக்கான இந்திய குடும்பங்களில் பேரழிவை ஏற்படுத்தும் : ராகுல் காந்தி தாக்கு!!

டெல்லி : மத்திய அரசின் தவறான பொருளாதார மேலாண்மையால் இந்தியா பெரும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கின் போது, இந்திய குடும்பங்களின் வருமானம் பற்றிய தரவுகள் அடங்கிய ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில் கொரோனா ஊரடங்கு எதிரொலியாக 10ல் 8 இந்திய குடும்பங்கள் வருமானத்தை இழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களை விட கிராமப்புற குடும்பங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்களுடன் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, மத்திய அரசின் மோசமான பொருளாதார மேலாண்மை, லட்சக்கணக்கான இந்திய குடும்பங்களில் பேரழிவை ஏற்படுத்தப் போவதாக குறிப்பிட்டுள்ளார். இதனை இனியும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் ராகுல் கூறி இருக்கிறார்.

Related Stories: