இந்திய பயனர்களின் தகவல்களை சீனா உள்பட எந்த வெளிநாட்டிற்கும் பகிர்வதில்லை; எதிர்காலத்திலும் பகிர மாட்டோம் : டிக் டாக் நிறுவனம் உறுதி!!

டெல்லி : இந்திய அரசின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு செயல்பட தயாராக இருப்பதாக டிக் டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து டிக் டாக் நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி நிகில் காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், விளக்கங்களை சமர்ப்பிப்பதற்கும், பதிலளிப்பதற்கும் ஒரு சந்தர்ப்பமாக அரசு பிரதிநிதிகளை சந்திப்பதற்கு நாங்கள் அழைக்கப்பட்டுள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்திய பயனர்களின் எந்த தகவல்களையும் சீனா அரசு உள்பட எந்த வெளிநாட்டு அரசுடனும் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பயனர்களின் விவரங்களை உயர் பாதுகாப்புடன் வைத்திருப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளித்திருப்பதாகவும் நிகில் காந்தி குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் அந்த அறிக்கையில் நிகில் காந்தி கூறியிருப்பதாவது, சீனா செயலிகளுக்கு தடை விதிக்கும் இந்திய அரசின் முடிவிற்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம். இந்தியாவின் தனிநபர் பாதுகாப்பு சட்ட படி, தனிநபர் விவரங்களை எந்தநாட்டுக்கும் பகிர்வதில்லை. எதிர்காலத்திலும் இந்திய பயனாளிகளின் தகவல்களை பிற நாடுகளுக்கு பகிர் மாட்டோம்என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக் டாக், ஷேர் இட், ஹெலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்கு தடை விதித்து மத்திய அரசு நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவையடுத்து கூகுள், ஆப்பிள், பிலே ஸ்டோரில் இருந்து இந்த செயலிகள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: