ஈரோடு பவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு!!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்கப்படுமென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதாவது நாளை முதல் அக்டோபர் 28ம் தேதி வரை காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார்.

பவானிசாகர் அணைக்கட்டு, தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணை என்னும் சிறப்புக்குரியது. ஆசியாவிலேயே மிக நீளமான மண் அணையும் இதுதான்.  இவைகளைத் தாண்டியும் பவானிசாகர் அணைக்குள் ஓர் வரலாற்றுச்சிறப்பு மூழ்கிக் கிடக்கிறது. அதாவது டணாய்க்கன் கோட்டை என்றழைக்கப்படும் ஓர் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் கோட்டை அணை நீருக்குள் மூழ்கிக் கிடக்கிறது. இவை கோடைக்காலங்களில் அணையில் நீர் வற்றிய பிறகு அந்த கோட்டை நம் கண்களுக்குப் புலப்படும் என கூறப்படுகிறது.

மேலும்,  பவானி சாகர் அணையின் கொள்ளளவு 32.8 டி.எம்.சி ஆகும். பவானி சாகர் அணையின் மூலம் புதிய ஆயக்கட்டு 2.07 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஆயக்கட்டு இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, வருடாவருடம் ஒரு பகுதிக்கு [ 1,03 ,500 ஏக்கர்] நெல்லுக்கும், மறு பகுதி புஞ்சை பயிர்களுக்கும், மாறி மாறி பாசனம் பெறப்பட்டு வருகிறது. நெல்லுக்கு 24 டி.எம்.சி நீரும், புஞ்சை பயிருக்கு 12 டி.எம்.சி நீரும் ஆக மொத்தம் 36 டி.எம்.சி நீர் தேவைப்படுகிறது.

இவ்வணையின் மூலம் பழைய ஆயகட்டுகளான தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பகுதிகள் பவானி சாகர் அணைக்கு கீழுள்ள கொடிவேரி அணைக்கட்டு மூலமும், காளிங்கராயன் அணைக்கட்டு மூலமும், அங்கு பாசன வசதிகள் நிறைந்து வருகின்றன. அவைகளுக்கு வருடா வருடம் 24 டி.எம்.சி நீர் தேவைப்படுகிறது. கொடிவேரி அணைக்கட்டு மூலம் 25 ,000 ஏக்கரும் , காளிங்கராயன் அணைக்கட்டு மூலம் 15 ,000 ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், பல்வேறு சிறப்புகளை கொண்ட அணையை திறப்பால் ஈரோடு, மொடக்குறிச்சி,கொடுமுடி வட்டம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள 15,743 ஏக்கர் பரப்பளவிலான நிலம் முற்றிலுமாக பாசன வசதி பெரும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

Related Stories: