ஐதராபாத்தில் நிகழ்ந்த சோகம்; வென்டிலேட்டர் அகற்றப்பட்டதால் கொரோனா பாதித்த இளைஞர் மூச்சுத்திணறி பலி!!!

ஹைதராபாத்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞர் வென்டிலேட்டர் அகற்றப்பட்டதால் மூச்சுவிடமுடியவில்லை என்று கூறி வீடியோ ஒன்றை பதிவிட்டதும் உயிரிழந்துள்ளார். இறப்பதற்கு முன் சுய வீடியோ பதிவை வெளியிட்ட இளைஞர், தனக்கு இதய துடிப்பு குறைகிறது, பை - டாடி என்று தெரிவித்து உயிரிழந்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கொரோனா நோயாளிகளை கையாள்வதில் அலட்சியம் ஏற்பட்டுள்ளதாகவும் தனக்கு பொருத்தப்பட்ட செயற்கை சுவாசத்தை பிடுங்கியதாகவும் இறக்கும் முன்னர் 35 வயது கொரோனா நோயாளி வீடியோவாக எடுத்துள்ளார்.

தெலுங்கானாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,419 ஆக உள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 9000 ஆகும். இதுவரை 247 பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞர் வென்டிலேட்டர் அகற்றப்பட்டதால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு வென்டிலேட்டர் கருவியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். மூச்சுவிட முடியவில்லை என்று கூறியும் 3 மணி நேரமாக வென்டிலேட்டர் பொறுத்தவில்லை என்று இளைஞர் கூறியுள்ளார்.

இதனை வீடியோவாக பதிவிட்டுள்ள அவர், இதையத்துடிப்பு குறைந்து வருவதாகவும், இறந்துவிடுவேன் என்றும் கூறியுள்ளார். சிறிது நேரத்திலேயே அந்த இளைஞர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். மூச்சுத்திணறல் ஏற்படுவதாக இளைஞர் கூறியும், வென்டிலேட்டர் வைக்காமல் இளைஞரின் உயிரை மருத்துவ நிர்வாகம் பறித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவுக்கு தங்கள் உயிரை கொடுத்து ஒரு பக்கம் மருத்துவர்கள் நோயாளிகளை காப்பாற்றி வருகிறார்கள், மறுபக்கம் தங்களது அலட்சியத்தால் நோயாளிகள் உயிரிழக்கவும் காரணமாக இருக்கிறார்கள் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Related Stories: