சீன ஆக்கிரமிப்பை எப்படி, எப்பொழுது மோடி அரசு அகற்றப்போகிறது என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை; ப.சிதம்பரம் ஆவேசம்..!!

சென்னை: சீன ஆக்கிரமிப்பை எப்படி, எப்பொழுது மோடி அரசு அகற்றப்போகிறது என்ற கேள்விக்கு ஏன் இதுவரை பதில் இல்லை? என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு பணம் திருப்பி விடப்பட்டதாகவும், பொதுமக்களுக்கான நிவாரண நிதியை குடும்ப அறக்கட்டளைக்கு திருப்பி விடுவது பெரிய மோசடி என்றும் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா குற்றம்சாட்டினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

2005 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை அந்தமான் தீவுகளில் சுனாமி நிவாரணப் பணிகளுக்காகப் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.20 லட்சம் பெற்றது உண்மைதான். ஒவ்வொரு ரூபாயும் நிவாரணப் பணிகளுக்குச் செலவழிக்கப்பட்டு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதில் என்ன தவறு?. 2005 நிவாரணப் பணிக்கும் 2020 சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு? முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் பாஜக முடிச்சு போடுகிறது. சீன ஆக்கிரமிப்பை எப்படி, எப்பொழுது மோடி அரசு அகற்றப்போகிறது என்ற கேள்விக்கு ஏன் இதுவரை பதில் இல்லை? இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

ஜே.பி.நட்டா நிகழ்காலத்துக்கு வர வேண்டும். கடந்தகாலத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்காதீர்கள் உங்களின் அரை உண்மைகளால் சிதைக்கப்பட்டுவிட்டது. இந்திய எல்லைக்குள் சீன ஊடுருவல் குறித்த எங்கள் கேள்விக்குப் பதில் அளியுங்கள். ஒருவேளை ராஜீவ்காந்தி அறக்கட்டளை பிரதமர் நிவாரண நிதியிடம் இருந்து பெற்ற ரூ.20 லட்சத்தைத் திருப்பிக் கொடுத்துவி்ட்டால், இந்திய எல்லையில் சீன ஆக்கிரமிப்பு அகற்றப்படும், ஏற்கெனவே இருக்கும் நிலை உறுதி செய்யப்படும் என்று பிரதமர் மோடி மக்களுக்கு உறுதியளிப்பாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: