தமிழகம், புதுச்சேரியில் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் விழுப்புரம், கடலூர், நாகையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. காஞ்சிபுரம், புதுச்சேரி, காரைக்கால், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர், திண்டுக்கல் மற்றும் தேனி, கோவை, நீலகிரி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Related Stories: