கொரோனா கோரத்தாண்டவத்தால் அமெரிக்காவில் 25 லட்சத்தை தாண்டிய பாதிப்பு: 126,780 பேர் உயிரிழப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா கோரத்தாண்டவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,504,588 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது. கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 97 லட்சத்தை தாண்டியுள்ளது. வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 4.91 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு குறையாமல் 40,000 பேருக்கு மேல் பாதிக்கப்படுகின்றனர். உயிரிழப்பு கடந்த 2 மாதங்களாக 2 ஆயிரம் குறையாமல் வந்துக்கொண்டிருந்தது. தற்போது சற்று குறைந்து காணப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் ஒரே நாளில் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும், கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 1.26 லட்சத்தைத் தாண்டியது. மேலும், கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 10.52 லட்சத்தை நெருங்குகிறது. சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 13.25 லட்சமாக உள்ளது.

Related Stories: