கிழக்கு லடாக்கில் பதற்றம் அதிகரிப்பது மிகவும் கவலை அளிக்கிறது: இங்கிலாந்து பிரதமர் பேச்சு

லண்டன்: இந்தியா-சீனா இடையேயான எல்லை பிரச்னையால் பதற்றம் அதிகரிப்பது மிகவும் கவலை அளிக்கிறது என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு எல்லை பிரச்னையில் இந்தியா-சீனா இடையே கடந்த 15ம் தேதி ஏற்பட்ட மோதல், உலகளவில் அதிர்்ச்சியை அளித்து ள்ளது. இந்த மோதல் குறி த்து  இங்கிலாந்து நாடாளு மன்றத்தில் நேற்று முன்தினம் கன்சர்வேடிவ் கட்சிஎம்பி பிளிக் டிரம்மன்ட் கேட்ட கேள்விக்கு பதிலளித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது:

ஒருபுறம் காமன்வெல்த் உறுப்பினர் நாடு, மறுபுறம் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு; இவை இரண்டிற்கும் நடுவே ஜனநாயகம் குறித்த நமது கருத்துக்கு சவால் விடும் சூழல் நிலவுகிறது. கிழக்கு லடாக்கில் பதற்றம் அதிகரிக்கும் சூழ்நிலை மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது. எனவே, இந்தியா-சீனா ஆகிய இரு நாடுகளும் தங்களுக்கு இடையே உள்ள எல்லை பிரச்னைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண முன் வர வேண்டும். இவ்வாறு போரிஸ் ஜான்சன் கூறினார்.

Related Stories: