கொரோனா நிவாரணப் பணியில் ஊழல் என புகார்.:சிவகங்கை ஒன்றியக் குழுக்கூட்டத்தில் சலசலப்பு

சிவகங்கை: கொரோன நிவாரண பணிகளை காரணம் காட்டி ஊழல் நடந்துள்ளதாக சிவகங்கை ஒன்றிய குழுக்கூட்டத்தில் உறுப்பினர்கள் புகார் எழுப்பி உள்ளனர். சிவகங்கை ஒன்றியக் குழுக்கூட்டத்தில் பல்வேறு திட்ட செலவுக்கு உறுப்பினர்களின் அனுமதி கோரப்பட்டது. இது குறித்த விவாதத்தின் போது கொரோன விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.18 லட்சம் செலவு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதேபோல் தரமற்ற கிருமிநாசினி வாங்கியுள்ளதாக உறுப்பினர்கள் புகார் கூறியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்ட்டது. கண்மாய் சுத்தம் செய்ததாக கூறி அடிக்கடி பணம் எடுத்ததாக ஒன்றிய குழு உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கணினி பழுது பார்த்ததாக கணக்கு கட்டப்படுவதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

Related Stories: