பொருட்களை பறிகொடுத்தவர் அழுகை... மனம் மாறி ஆறுதல் கூறிய திருடர்கள்!

பாகிஸ்தான் கராச்சியில் டெலிவரி செய்யும் நபர் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ஒரு வீட்டில் டெலிவரி செய்து விட்டு திரும்பும்போது. இரு சக்கர வாகனத்தில் 2 திருடர்கள் டெலிவரி செய்யும் நபர் பக்கத்தில் வந்து வாகனத்தை நிறுத்தினர், அதில் ஒருவர் வாகனத்தில் இருக்க மற்றொருவர் முகத்தை கைகுட்டையால் மறைத்துக்கொண்டு டெலிவரி செய்யும் நபரிடம் கத்தியை காட்டி உன்னிடம் இருக்கும் அனைத்தையும் கொடு என்று மிரட்டுகிறார்.

அதிர்ச்சி அடைந்த அந்த நபர் தன்னிடம் இருந்த பொருட்களை கொடுத்து விட்டு தான் மிகவும் கஷ்டப்படுவதாக அழுகிறார். இதனால் மனம் மாறிய திருடர்கள், தாங்கள் பறித்த பொருட்களை அவரிடம் கொடுத்துவிட்டு கட்டியணைத்து ஆறுதல் கூறியுள்ளனர். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: