பணிக்கு சென்றபோது இ-பாஸ் கேட்டு அரசு ஊழியரை தாக்கிய போலீசார்: அடையாள அட்டை காண்பித்தும் அடாவடி

ஆவடி:  முழு ஊரடங்கு காரணமாக முக்கிய சாலைகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, திருநின்றவூர் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில்  போலீசார் நேற்று காலை பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, திருவள்ளூரில் இருந்து ஆவடிக்கு பைக்கில் வந்த நபரை மடக்கி நிறுத்தி விசாரித்தனர். அதில், அவர் மின்வாரிய ஊழியர் என்பது தெரிந்தது. அவர் தனது அடையாள அட்டையை போலீசாரிடம் காண்பித்து, வேலைக்கு செல்வதாக கூறினார். ஆனால், அதனை போலீசார் ஏற்க மறுத்து இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிப்போம், எனக் கூறினர்.

இதனால், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த போலீசார், மின்வாரிய ஊழியரை சரமாரி தாக்கி, கீழே தள்ளினர். அப்போது, அவர் கையெடுத்து கும்பிட்டு, என்னை விட்டுவிடுங்கள் எனக்கூறிய பிறகு, விடுவித்தனர். இதுதொடர்பாக மின்வாரிய ஊழியர் உயர் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: