பொதுத்துறை நிறுவனங்களின் ரூ.4 லட்சம் கோடி ஏஜிஆர் நிலுவையை திரும்ப பெறுவதாக மத்திய அரசு தகவல்

*உச்ச நீதிமன்றத்தில் தகவல்

புதுடெல்லி : புதிய தொலைத்தொடர்பு கொள்கைப்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏஜிஆர் எனப்படும் சரிக்கட்டப்பட்ட நிகர வருவாயில் இருந்து குறிப்பிட்ட சதவீத தொகையை ஆண்டு உரிம கட்டணமாக அரசுக்கு செலுத்த வேண்டும். இதன்படி, வோடபோன், பாரதி ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நிலுவையை வட்டியுடன் மொத்தம் ரூ.1.47 லட்சம் செலுத்த உத்தரவிடப்பட்டது.

அதோடு, கெயில் இந்தியா, பவர் கிரிட் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏஜிஆர் கட்டண பாக்கியாக மொத்தம் ரூ.4 லட்சம் கோடி செலுத்த வேண்டும் என தொலைத்தொடர்பு துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதை எதிர்த்து இந்நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பொதுத்துறை நிறுவனங்களின் நிலுவை ரூ.4 லட்சம் கோடியை தொலைத்தொடர்பு துறை திரும்ப பெற முடிவு செய்திருப்பதாக மத்திய அரசு வக்கீல் தெரிவித்தார்.இதை ஏற்று நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related Stories: