தெள்ளிமேடு ஏரியில் மண் திருடிய அதிமுக பிரமுகர் கைது

செங்கல்பட்டு: சிங்கபெருமாள் கோயில் அடுத்த தெள்ளிமேடு ஏரியில் பொக்லைன் மூலம், லாரிகளில் சவுடு மண் திருடுவதாக பாலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், நேற்று முன்தினம் இரவு, சம்பவ இடத்துக்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, போலீசாரை கண்டதும், அங்கிருந்த மர்மநபர்கள் லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தை விட்டு விட்டு தப்பியோடினர். உடனே போலீசார், அவர்களை விரட்டி சென்று, ஒருவரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை, காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

அதில், அதிமுக பிரமுகர் வேங்கடாபுரத்தை சேர்ந்த மோகன்ராஜ் (50). வெங்கடாபுரம் ஊராட்சி அதிமுக கிளைசெயலாளரும், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜமுனாவின் கணவரும் என தெரிந்தது. இதையடுத்து வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், அதிமுக பிரமுகர் மோகன்ராஜை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: