அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் உள் ஒதுக்கீடு: பாஜ தலைவர் எல்.முருகன் வரவேற்பு

சென்னை: தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் வௌியிட்டுள்ள அறிக்கை: நீட் தேர்வு இந்தியா முழுவதும்  நடைபெற்று வருகிறது. இதிலும் சராசரி  விகித அடிப்படையில் பார்க்கும்பொழுது தமிழகத்தில் தான் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்கிறார்கள். தமிழகத்தில் ஏறத்தாழ 84 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத இருக்கிறார்கள். இதில் அரசு பள்ளி மாணவர்கள் ஆயிரக்கணக்கில் தேர்ச்சி  பெற்றாலும் மதிப்பெண்கள்  அடிப்படையில் போதுமான மருத்துவ இடங்களை பெற இயலவில்லை. இந்த நிலை நீட் தேர்வு அமல்படுத்துவதற்கு முன்பிருந்தே நீடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வில் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுவதால் சமூக  நீதி கடைப்பிடிக்கப்படுகிறது. இப்போது அரசு  பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் நிலையில் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. இனி  நீட் தேர்வுகளில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்பது உறுதி. மாணவர்கள் கல்வி பயிலும் வழிகளில் சம வாய்ப்பு இல்லாத நிலையில் இந்த உள் ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது. தமிழக அரசு 453 இடங்களில் நீட் பயிற்சி அளித்து வருவதை பயிற்சி அளிக்கும் முறைகளை மேலும் மேம்படுத்த வேண்டும்.நீதிபதி பொன்.கலையரசன் குழு அளித்துள்ள பரிந்துரையை ஏற்று உள் ஒதுக்கீடு வழங்க முன் வந்துள்ள தமிழக அரசை பாராட்டுகிறேன்.

Related Stories: