அமெரிக்காவில் இருந்து வந்த 100 வென்டிலேட்டர்களை வழங்கினார் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென் ஜஸ்டர்

டெல்லி: இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென் ஜஸ்டர், யு.எஸ்.ஏ.ஐ.டி (யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட்) முதல் 100 வென்டிலேட்டர்களை இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமையகத்தில் வழங்கினார். கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கேட்டுக்கொண்டதால் மலேரியா நோயை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை இந்தியா, அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தது. இதற்கு பிரதிபலனாக உயர் தொழில்நுட்ப வென்டிலேட்டர்களை இந்தியாவுக்கு நன்கொடையாக வழங்குவதாக கடந்த மாதம் அமரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: