காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம், தீவிரவாதிகள் தாக்குதல்.: தாக்குதலில் ஈடுப்பட்ட இருவருக்கும் இந்திய ராணுவம் பதிலடி

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அவர்களின் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் பல இடங்களில் தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பதன்பூர் என்ற இடத்தில் தீவிரவாதிகளுடன் இந்திய ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. காஷ்மீரில் இரண்டு நாட்களுக்கு முன்பு உள்ளூர் அரசியல் தலைவரான பண்டிட் அஜய் பண்டிதா, அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 5 தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது. இதனால் ஆத்திரம் அடைந்த தீவிரவாதிகள் அதிகாலையிலே தாக்குதலை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஒருவாரத்தில் நடைபெறும் நான்காவது தாக்குதல் இது. இதனிடையே நேற்று இரவு 10.30 மணி அளவில் பல இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தியதோடு கையெறி குண்டுகளையும் வீசியது. இதில் ரஜோரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். ஒரு புறம் தீவிரவாதிகள் மீதும் ஒரு புறம் பாகிஸ்தான் ராணுவம் மீதும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அதிகாலை முதலே சண்டை தொடர்வதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

Related Stories: