பாகிஸ்தானில் அதிகரிக்கும் பலி தினசரி 100 பேராக உயர்வு : ஊரடங்கு பற்றி பிரதமர் பேச்சு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் உயர்ந்து வருகிறது. இதன் தாக்கம் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தான் குறையும் என்று பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை நாள்தோறும் ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. நேற்று காலை வரையிலான நிலவரப்படி, 1 லட்சத்து 3 ஆயிரத்து 671 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 2,067 பேர் இறந்திருப்பதாகவும் இந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாள்தோறும் 60 முதல் 80 பேர் வரையில் இறந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் பலி 100 ஆக அதிகரித்தது. இதேபோல் வருங்காலத்தில் அதிகரிக் கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தொலைக்காட்சி மூலம் மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது:

கொரோனாவை மக்கள் சாதாரண ப்ளூ காய்ச்சலாக கருதி அரசின் வழிகாட்டுதல் விதிகளை பின்பற்றாமல் இருந்தால் அதனைக் கட்டுப்படுத்த முடியாது. ஊரடங்கின் மூலம் கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர முடியாது, கட்டுப்படுத்த மட்டுமே முடியும். இதனால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து ஏழை மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். வழிகாட்டுதல் விதிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பொருளாதாரம் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது. இதன் மூலம், ஏழைகள் தங்கள் வாழ்வாதாரத்துக்கு தேவையானவற்றை சம்பாதிக்க முடியும். என்றார்.

Related Stories: