அன்லாக் 1.0 அமலுக்கு வந்தது : 75 நாட்களுக்கு பிறகு நாடு முழுவதும் வணிக வளாகங்கள், நட்சத்திர விடுதிகள், சுற்றுலா தலங்கள் திறப்பு!!

டெல்லி : மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, நாடு முழுவதும் வணிக வளாகங்கள், நட்சத்திர விடுதிகள், ஷாப்பிங் மால்கள் செயல்பட தொடங்கியுள்ளன. கொரோனா பரவலை தடுக்க மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வணிக வளாகங்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஊரடங்கில் படிப்படியாக தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை அமலுக்கு வந்ததை அடுத்து வணிக வளாகங்கள், ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன.

ஷாப்பிங் மால்கள், உணவகங்களில் வாடிக்கையாளர்கள், பணியாளர்களை உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.கடைகளுக்கு உள்ளே தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஷாப்பிங் மால்களில் உள்ள திரையரங்குகள், சிறுவர்கள் விளையாடும் இடங்கள் செயல்பட அனுமதி கிடையாது. இதே போல மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா மையங்கள், மற்றும் நினைவுச் சின்னங்களும் திறக்கப்பட்டுள்ளன.  

Related Stories: