கர்ப்பிணிக்கு கொரோனா?: பரிசோதனையில் குழப்பம்

புழல்: புழல் அடுத்த காவாங்கரையை சேர்ந்த 26 வயது நிறைமாத கர்ப்பிணிப்பெண்ணிற்கு கடந்த 2ம் தேதி புழல் 22வது வார்டில் உள்ள மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலைத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், கடந்த 5ம் தேதி இவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில், சந்தேகமடைந்த கர்ப்பிணி 5ம் தேதி தனியார் மையம் ஒன்றில் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். தனியார் ஆய்வக முடிவில் இவருக்கு கொரோனா தொற்று ஏதும் இல்லை என முடிவு வந்ததால் பெரும் குழப்பமடைந்தார். இதற்கிடையே, கர்ப்பிணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அவரை சுகாதாரத்துறையினர் சென்னை ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனை கொரோனா பிரிவில் சேர்த்தனர்.

Related Stories: