பீட்ரூட் விவசாயம் பிரமாதம்: களையெடுக்கும் தொழிலாளர்கள்

போடி: போடி அருகே பீட்ரூட் விவசாயத்தில் 60வது நாளில் நான்காவது முறை களைஎடுக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். போடி நகர் ஒன்றிய பகுதியில் கொட்டகுடி மற்றும் பதினெட்டாம் கால்வாய் தண்ணீரை கொண்டு பல்வேறு குளங்களில் நிரப்புவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால் பாசன நீரை பெற்று பல ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் பல்வேறு தரப்பட்ட விவசாயத்தை செய்து வருகின்றனர். அப்படி தென்னை, மா, பலா, வாழை, நெல், சோளம், மக்காச்சோளம், பருத்தி என பயிர்களை தடையின்றி சாகுபடி செய்து வருகின்றனர். போடி அருகே நாகலாபுரம் திம்மநாயக்கன்பட்டி ராசிங்காபுரம் போன்ற பகுதிகளில் 70 நாட்களில் பலனாக கிடைக்கும் பீட்ரூட் சாகுபடி செய்துள்ளனர். ஏக்கருக்கு ரூ.40 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்து குறுகிய காலத்தில் அறுவடை செய்கின்றனர்.

விதைக்கப்பட்டு நேற்றோடு 60வது நாளில் நான்கு முறை களையெடுக்கப்பட்டிருக்கிறது. அறுவடைக்கு வரும் 10 நாட்களின் இடையில் ஒரு களை எடுப்போடு அறுவடைக்கு தயாராகி விடும். கொரோனா ஊரடங்கால் சரிவரப் போக்குவரத்து இல்லாததாலும் வியாபாரிகள் சரிவர வராததால் காய்கறிகளுக்கு நிர்ணய விலை இல்லாமல் சிரமப்படுகின்றனர். தற்போது அறுவடைக்கு பின் தளர்வுகளின்படி போக்குவரத்தும் துவங்கியுள்ளதால் உற்பத்தி விலை கிடைக்குமா என்ற கவலையில் களை எடுத்து வருகிறோம் என்று விவசாயிகள் வருத்தம் தெரிவித்தனர்.

Related Stories: