கலிங்கப்பட்டியில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு: வைகோ பரபரப்பு புகார்

சென்னை: மதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் வெட்டுக்கிளிகள் படை, பருத்திச் செடிகளின் மேல் படர்ந்துள்ளன. இதுகுறித்து, விவசாயிகள் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். வேளாண்துறை அதிகாரிகள் நேற்று (நேற்று முன்தினம்) வருகை தந்து ஆய்வு செய்தனர். இவை, பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல. எனவே அச்சப்படத் தேவை இல்லை என்று கூறி உள்ளனர்.

இது தொடர்பாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் உடன் பேசினார். ஆட்சியர் அந்தப் பகுதிகளைப் பார்வையிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
Advertising
Advertising

Related Stories: