சிஏபிஎப் கேன்டீன் உள்நாட்டு தயாரிப்பு உத்தரவை நிறுத்தி வைத்தது மத்திய அரசு

புதுடெல்லி: பிரதமர் மோடியின் அறிவுரைப்படி உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்க, நாடு முழுவதும் உள்ள துணை ராணுவப் படையினருக்கான 1,700 கேன்டீன்களில் ஜூன் 1ம் தேதி முதல் உள்நாட்டில் தயாரான பொருட்கள் மட்டுமே விற்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மாதம் 13ம் தேதி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், டாபர், விஐபி இன்டஸ்ட்ரீஸ், யுரேகா போர்ப்ஸ், ஜாகுவார், இந்துஸ்தான் லீவர் என 70 நிறுவனங்களின் 1,026 தயாரிப்பை விற்க விதிக்கப்பட்ட தடையை  மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. விரைவில் இது தொடர்பான திருத்தப்பட்ட அறிக்கை விரைவில் வெளியாகும் என்று உள்துறை கூறியுள்ளது.

Related Stories: