கொடைக்கானல் ஏரியில் காட்டுமாடுகள் விசிட் : பொதுமக்கள் பீதி

கொடைக்கானல்: கொடைக்கனால் ஏரிப்பகுதியில் நேற்று காட்டுமாடுகள் சுற்றித் திரிந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள், சுற்றுலா செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. பொதுமக்களும் வெளியில் செல்லாமல் இருந்து வருகின்றனர். இதனால் பிரையன்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், தூண் பாறை போன்ற சுற்றுலா இடங்கள் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த பகுதியில் மனிதர்களின் நடமாட்டம் இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் கொடைக்கானல் நகர் பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் இருந்து காட்டுமாடுகள் நகர்ப் பகுதிக்குள் வந்து செல்கின்றன. நேற்று கொடைக்கானல் ஏரி பகுதியில் காட்டு மாடுகள் சர்வசாதாரணமாக உலா வந்தன. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். எனவே, நகர் பகுதிக்குள் காட்டு மாடுகள் வருவதை தவிர்க்கும் விதமாக வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: