* இந்திய கிரிக்கெட்டுக்கு பங்களிக்க எம்.எஸ்.டோனியிடம் இன்னும் நிறைய திறமை மிச்சம் இருக்கிறது என்று பிசிசிஐ முன்னாள் பொருளாளர் அநிருத் சவுத்ரி கூறியுள்ளார்.
* உலகில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களுக்கான போர்ப்ஸ் டாப் 100 பட்டியலில், இந்தியா சார்பில் விராத் கோஹ்லி 66வது இடம் பிடித்துள்ளார். டாப் 100ல் உள்ள ஒரே கிரிக்கெட் வீரரும் அவர் தான். டென்னிஸ் நட்சத்திரம் பெடரர் 5வது இடத்தில் இருந்து முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளார்.*ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதாக உள்ள ஐசிசி ஆண்கள் உலக கோப்பை டி20 தொடரை இந்த ஆண்டு ரத்து செய்யவும் வாய்ப்பு உள்ளது என்று மெரில்போன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) தலைவர் குமார் சங்கக்கரா தெரிவித்துள்ளார்.* வைரஸ் தொற்று அச்சுறுத்தல் இல்லாத பாதுகாப்பான சூழல் உறுதி செய்யப்பட்டால், வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் இல்லாமல், பூட்டிய ஸ்டேடியங்களில் போட்டிகள் நடைபெறும்.