கிருஷ்ணகிரி மாவட்டம் நேரலகிரி கிராமத்தில் வெட்டு கிளிகளின் வேட்டை ஆரம்பம்? மாவட்ட ஆட்சியர் தகவல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நேரலகிரி கிராமத்தில் வெட்டு கிளிகளின் வேட்டை ஆரம்பமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அடுத்த நேரலகிரி கிராமத்தில் உள்ள வெட்டு கிளிகளால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். எருக்கன் செடிகளில் மட்டும் இருக்க கூடிய இந்த வெட்டு கிளிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை வேளாண்மை துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆய்வு செய்த பிறகு செய்து உரிய நடவடிக்கை எடுக்க எடுக்கப்படும் என்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தகவல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சில மாநிலங்களை தாக்கிய வெட்டுக்கிளிகள் தமிழகத்தை தாக்க தொடங்கியுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆந்திர எல்லையில் கூட்டம் கூட்டமாக காணப்படும் வெட்டுக்கிளிகளால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

Related Stories: