நாம் நமது பொறுப்புகளை உணர்ந்து கொள்ள வேண்டும்; அரசியலுக்கான நேரம் இது அல்ல: பிரியங்கா காந்தி

லக்னோ: நாம் நமது பொறுப்புகளை உணர்ந்து கொள்ள வேண்டும்; அரசியலுக்கான நேரம் இது அல்ல என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் பல லட்சம் வெளிமாநில  தொழிலாளர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இவர்கள் சிறப்பு ரயில்கள்,  பஸ்கள், லாரி, வேன், கன்டெய்னர் லாரிகள் என பல்வேறு வகைகளில் சொந்த ஊர்  திரும்பி வருகின்றனர். இவற்றில் இடம் கிடைக்காத அல்லது பணம் இல்லாதவர்கள்  பல நூறு கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்கின்றனர். இவர்களின் நிலைமை மிகவும்  பரிதாபமாக இருக்கிறது.

மேலும், இவர்கள் தண்டவாளங்கள், சாலைகளில் நடந்து  செல்லும்போதும், வாகனங்களில் செல்லும்போதும் விபத்துகள் ஏற்பட்டு, இதுவரை  நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். நேற்று கூட, பீகாரில்  நடந்த விபத்தில் 9 பேர் பலியாகினர். இந்நிலையில், உத்தர பிரதேசத்தில்  சிக்கியுள்ள பல்வேறு மாநில தொழிலாளர்களை, அவர்களின் சொந்த ஊர்களுக்கு  அழைத்துச் செல்வதற்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின்  உத்தரவுப்படி, ஆயிரம் தனியார் பேருந்துகளை இயக்க காங்கிரஸ் ஏற்பாடு  செய்துள்ளது. ஆனால், இதற்கு உத்தர பிரதேச அரசு அனுமதி அளிப்பதில் பல்வேறு  சந்தேக கேள்விகளை எழுப்பி முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

இதனால், இந்த  விவகாரத்தில் இம்மாநில அரசுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி மோதல்  ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாம் நமது பொறுப்புகளை உணர்ந்து கொள்ள வேண்டும்; அரசியலுக்கான நேரம் இது அல்ல என பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார். நாம் நமது பொறுப்புகளை உணர்ந்து கொள்ள வேண்டும் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே சொந்த ஊர் திரும்புகின்றனர். அவர்கள் இந்தியர்கள் மட்டுமல்ல இந்திய திருநாட்டின் முதுகெலும்புகள். நாடு அவர்களின் ரத்தத்திலும், வியர்வையிலும் ஓடிக்கொண்டு இருக்கிறது. அவர்கள் பத்திரமாக ஊர் திரும்ப ஏற்பாடு செய்வது நமது கடமை. இது அரசியலுக்கான நேரம் அல்ல.

புலப்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக பேருந்துகள் தயாராகி 24 மணி நேரம் ஆகிறது, அவைகளை பயன்படுத்த அனுமதி கொடுங்கள். பேருந்துகளில் பாஜக கொடிகளையும், ஸ்டிக்கர்களையும் ஒட்டி வேண்டுமானாலும் பேருந்துகளை இயங்குகள். பேருந்துகளை நீங்கள் தான் ஏற்பாடு செய்ததாக சொல்லுங்கள், ஆனால் பேருந்துகளை இயக்கி நடந்து வரும் மக்களை காப்பாற்றுங்கள் என கூறியுள்ளார்.

Related Stories: