சொந்த ஊருக்குத் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு ரயிலில் ஆண் குழந்தை பிறந்தது!!!

பாட்னா : சிறப்பு ரயிலில் பயணித்த கர்ப்பிணி ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், அவருடன் பயணித்த பயணிகளே பிரசவம் பார்த்ததால், தாயும் சேயும் நலமாக உள்ளதாக மேற்கொண்டு சிகிச்சையளித்த மருத்துவர் தெரிவித்தனர்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பிரதமர் மோடி 4ம் கட்ட ஊரடங்கை அறிவித்த நிலையில், அதில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு கட்டமாக, வெளிமாநிலங்களில் சிக்கித்தவிக்கும் சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப சிறப்பு ரயில்களை மத்திய அரசு ஏற்பாடு செய்தது.அதில் பல தொழிலார்கள் தங்களின் சொந்த ஊருக்கு பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் குஜராத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் பீகார் சென்ற போது கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து உடன் இருந்த பயணிகளே பிரசவம் பார்த்துள்ளனர். தனாபூர் ரயில் நிலையத்தில் தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழு தாயையும் சேயையும் மீட்டு மேற்கொண்டு சிகிச்சை அளித்துள்ளனர். இது குறித்து தெரிவித்த மருத்துவர், பயணிகள் உதவியுடன் இந்த பிரசவம் நடந்துள்ளது. ரயில் இங்கு வந்தவுடனே மேற்கொண்டு சிகிச்சையால் பிரசவத்தை நிறைவாக்கினோம். தற்போது தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள்எனத் தெரிவித்தார்.முகமது அஸ்லம் அன்சாரி, மினாஸ் கார்டவுன் என்ற தம்பதியினருக்கு ரயில் நிலையத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Related Stories: