திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆன்லைன் காணிக்கை அதிகரிப்பு

அமராவதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஊரடங்கு நேரத்திலும் ஆன்லைனில் பக்தர்கள் காணிக்கை செலுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பக்தர்களின் காணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவின் கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதன் அடிப்படையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மே 20ஆம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே சுவாமிக்கு செலுத்த வேண்டிய காணிக்கைகளை ஆன்லைன் மூலம் செலுத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ 1.79 கோடி பக்தர்கள் ஆன்லைன் மூலமாக உண்டியல் காணிக்கை செலுத்திய நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஊரடங்கு இருந்தாலும் தங்கள் வீடுகளில் இருந்தபடியே ஏழுமலையானுக்கு ஆன்லைன் மூலம் இ.உண்டியில் 1.97 கோடி ரூபாய் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.

Related Stories: