ஊரடங்கு வறுமையால் நேர்ந்த கொடூரம்?...ஸ்ரீபெரும்புதூரில் 3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தந்தை தற்கொலை

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே வடமங்கலத்தில் 3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஊரடங்கு காரணமாக வறுமையில் சிக்கி தவித்த  கூலித்தொழிலாளி ஆறுமுகம் என்பவர் தனது 2 மகள், ஒரு மகனை கொன்று விட்டு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் அருகே வடமங்கலம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஆறுமுகம், இவருக்கு கோவிந்தம்மாள் என்பவருடன் திருமணமாகி ராஜேஸ்வரி, ஷாலினி மற்றும் சேதுராமன் என்கின்ற 3 குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் இன்று அவரது மனைவி கோவிந்தம்மாள் பணிக்கு சென்று இருக்கிறார், பின்னர் இன்று மாலை வீட்டிற்கு திரும்பிய போது அவரது மகள் ராஜேஸ்வரி சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அக்கம் பக்கத்தில் பார்த்தபோது அவரது கணவர் ஆறுமுகம் அருகே இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அதன் பிறகு மேலும் இருக்கின்ற 2 பிள்ளைகளை அனைவரும் தேடி இருக்கின்றனர். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார், மேலும் 2 குழந்தைகளை கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தீவிரமாக தேடிக்கொண்டு வந்தனர். இதனையடுத்து வீட்டின் அருகே கிணற்றில் தேடி பார்த்தபோது மீதமுள்ள 2 குழந்தைகளை கயிற்றில் கட்டி தூக்கி கிணற்றில் வீசியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. அந்த 2 குழந்தைகளும் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் கோவிந்தம்மாள் மற்றும் அறிமுகம் ஆகியோருக்கு குடும்ப தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இதன் சம்பவம் காரணமாக குழந்தைகள் கொல்லப்பட்டார்களா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஊரடங்கால் வறுமையில் பாதிக்கப்பட்டு தற்கொலையில் ஈடுபட்டார்களா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: