திருமலை: ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு சொந்தமான ராட்சத பைப்லைனில் இருந்து காஸ் கசிந்ததால் மக்கள் அவதிப்பட்டனர். ஆந்திராவின் ராஜோலு அடுத்த கிழக்குபாளையம் கிராமம் வழியாக ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு சொந்தமான ராட்சத பைப் மூலம் காஸ் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை இந்த பைப்பில் இருந்து திடீரென காஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இந்த தகவலறிந்த அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் தவித்தனர். பலர் வீடுகளுக்குள் முடங்கினர்.
