இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் வாய்ப்பு பறிபோனது நாடு கடத்தப்படுகிறார் மல்லையா: 28 நாளில் இந்தியா அழைத்து வர ஏற்பாடு

லண்டன்: வங்கி கடன் மோசடி விவகாரத்தில் தொழிலதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பை இழந்தார். தொழிலதிபர் விஜய் மல்லையா (64) இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் வாங்கி திருப்பி செலுத்த தவறினார். வெளிநாடு தப்பிய அவர் மீது அமலாக்கத் துறையும், சிபிஐ.யும் வழக்கு பதிவு செய்து விசாரித்தன. இங்கிலாந்தில் தஞ்சமடைந்த மல்லையாவை, நாடு கடத்தி, இந்தியாவுக்கு அழைத்து வர சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இரு விசாரணை அமைப்புகளும், லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் விஜய் மல்லையா கடந்த 2017ல் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், மல்லையாவை நாடு கடத்தும்படி கடந்த 2018ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து லண்டன் உயர் நீதிமன்றத்தில் மல்லையா மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 20ம் தேதி தள்ளுபடி செய்தது. இதனால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது மட்டுமே மல்லையாவுக்கான கடைசி  வாய்ப்பாக இருந்தது. அதன்படி, கடந்த 5ம் தேதி மல்லையா மனு செய்தார். இங்கிலாந்து நீதிமன்ற விதிமுறைப்படி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தகுந்த சட்ட காரணங்கள் இருக்க வேண்டும். பெரும்பாலும் பொது நலன் சம்மந்தப்பட்ட வழக்குகள் மட்டுமே அங்கு மேல்முறையீடு செய்ய முடியும். இதனால், தகுந்த சட்ட காரணங்கள் இல்லாததால் மல்லையாவின் மனு நேற்று நிராகரிக்கப்பட்டது.

இதனால், அவர் முழுமையான சட்ட வாய்ப்புகளை இழந்துள்ளார். அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவது உறுதியாகி உள்ளது. இந்தியா-இங்கிலா்து ஒப்படைப்பு ஒப்பந்தத்தின்படி, இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பிரிதி படேல், நீதிமன்ற உத்தரவுக்கு முறைப்படி சான்றழிதல் அளிக்க வேண்டும். இந்த நடைமுறைகள் அனைத்தும் 28 நாட்களில் முடிக்கப்பட வேண்டும். எனவே, அடுத்த 28 நாட்களில் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவது உறுதியாகி விட்டது.  அரசியல் ரீதியாக பெரும் விவாதத்தை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் மல்லையாவை நாடு கடத்த உத்தரவு பிறக்கப்பட்டால், அது இந்திய விசாரணை அமைப்புகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக

கடைசியாக மோடிக்கு ஐஸ் வைத்தார்

இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் தனது மேல்முறையீடு மனு நிராகரிக்கப்பட்டு விடும் என்று மல்லையாவுக்கு முன்கூட்டியே அவருடைய வக்கீல்கள் தெரிவித்தனர். இதனால், நீதிமன்ற உத்தரவு வரும் முன்பாக டிவிட்டரில் மல்லையா வெளியிட்ட பதிவில், பிரதமர் மோடிக்கு கடைசியாக தனக்கு மன்னிப்பு வழங்கும்படி ஐஸ் வைத்தார். அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொருளாதாரத்தை மீட்க ரூ.20 லட்சம் கோடி நிதி சலுகை அறிவித்துள்ள இந்திய அரசை மனதார பாராட்டுகிறேன்.

இந்திய அரசு அவர்களின் தேவைக்கு ஏற்றார் போல் ரூபாய் நோட்டுகளை எவ்வளவு வேண்டுமானாலும் அச்சிடலாம். ஆனால், என்னைப் போன்ற சிறு பங்காளர் 100 சதவீத வங்கிக் கடனை திருப்பி செலுத்துகிறேன் என்று கூறியும் தொடர்ந்து அதை புறக்கணிக்கிறீர்களே? நான் வங்கியில் வாங்கிய மொத்த கடனையும் கட்டி விடுகிறேன். தயவு செய்து நிபந்தனையின்றி என் பணத்தை எடுத்துக் கொண்டு, வழக்கை முடித்து வையுங்கள்’ என கூறியுள்ளார்.

Related Stories: