நிதி நெருக்கடியை சமாளிக்க முடியவில்லை: வரியை 300% உயர்த்திய சவுதி அரேபியா; குடிமக்களுக்கு வழங்கிவந்த மானியத்தையும் நிறுத்துகிறது

சவூதி : சவுதி அரேபியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை மீட்டெடுக்க மதிப்புக்கூட்டு வரியை உயர்த்துவதோடு குடிமக்களுக்கு வழங்கிவந்த மானியத்தையும் நிறுத்தவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கோவிட் 19 வைரஸ் உலகம் முழுவதும் உயிர்பலிகளை மட்டுமல்ல பெரும் பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவல் எதிரொலியாக சர்வதேச அளவில் போக்குவரத்து முடங்கி இருப்பதால் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. இதனால் எண்ணெய் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் சவூதி அரேபியா, கடும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக வாட் எனப்படும் மதிப்புக் கூட்டு வரியை சவூதி அரேபியா அரசு 3 மடங்கு உயர்த்துவதாக அறிவித்துள்ளது. பொருட்கள் மீதான வாட் வரி 5%-ல் இருந்து 15%ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சவூதி அரசு அறிவித்திருக்கும் வாட் வரி உயர்வு வரும் ஜூலை மாதம் முதல் 1ம் தேதியில் இருந்து அமல்படுத்தப்பட உள்ளது. இது தவிர அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் நிதி சலுகைகள் ஜூன் மாதத்தில் இருந்து நிறுத்தப்படுகிறது. மேலும் குடிமக்களுக்கு அரசு மூலமாக வழங்கப்பட்டு வரும் மானியமும் ஜூன் 1ம் தேதி முதல் நிறுத்தப்படவுள்ளது. நடப்பாண்டின் முதல் காலாண்டில் இந்திய மதிப்பீட்டில் சுமார் 68,200 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதாக சவூதி அரேபியா அரசு தனது நிதிநிலை அறிக்கையில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: