மது வாங்கியதாக வைரலான வீடியோ: நடிகை ரகுல் பிரீத் கோபம்

மது கடைக்கு சென்று நடிகை ரகுல் பிரீத் சிங் மது வாங்கியதாக வைரலான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது. நாடெங்கிலும் பல்வேறு மாநிலங்களில் மது கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மது கடைகளுக்கு சென்று பெண்கள் மது வாங்கி வரும் சம்பவங்களும் நடந்தன. நடிகை ரகுல் பிரீத் சிங், கடைக்கு சென்று கையில் சிறு பாட்டில்களுடன் வெளியே வரும் காட்சிகள் ஒரு வீடியோவில் பதிவாகியுள்ளது. அவர் மது பாட்டில்கள் தான் வாங்கி வருகிறார் என்று நெட்டிசன்கள் கொளுத்திப்போட, இந்த வீடியோ வைரலானது. இது பற்றி அறிந்து கோபம் அடைந்த ரகுல், தனது ட்விட்டரில், கேட்பதற்கே விசித்திரமாக உள்ளது. மருந்து கடையில் மது விற்கிறார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.  அந்த வீடியோவை நன்றாக பாருங்கள். அவர் மருந்து கடைக்கு தான் சென்று வருகிறார் என்று நெட்டிசன்களில் சிலர் ரகுலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: