ஹாலிவுட் நடிகையிடம் நடிப்பு கற்கும் சமந்தா

கொரோன ஊரடங்கு காலத்தில் நடிகைகள் தங்களுக்கு பிடித்த ஏதாவது ஒன்றை செய்து வருகிறார்கள். நடிகை சமந்தா நடிப்பு கற்கிறார். அதுவும் ஹாலிவுட் நடிகையிடம். இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல நடிகை ஹெலன். ஆண்டனி அண்ட் கிளியோபாட்ரா  நாடகத்தின் மூலம் புகழ்பெற்றவர்.  அதன் பிறகு ஹாலிவுட் படங்களில் நடித்தார். சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றவர். தற்போது சினிமாவில் இருந்து விலகி இருக்கும் அவர் நடிப்பு பயிற்சி மையம் ஒன்றை நடத்துகிறார். கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால்  மாஸ்டர் க்ளாஸ் என்ற யூடியூப் சேனல் மூலம் நடிப்பு கற்றுக் கொடுக்கிறார்.

இதில் சேர்ந்துதான் சமந்தா நடிப்பு கற்று வருகிறார். “ஆயிரம் மணிநேரங்களில் ஒரே ஒரு மணிநேரம் ஆக்கபூர்வமானதாக இருந்தாலும் , அதை கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும். நான் இப்போது சிறந்த நடிகையாகப் போகிறேன். அதைப் பொறுத்திருந்து பாருங்கள்” என்கிறார் சமந்தா.

Related Stories: