மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நிகழ்வை இணைய தளங்களில் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடு

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நிகழ்வை இணைய தளங்களில் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் திருக்கல்யாணத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை. மீனாட்சி திருக்கல்யாணத்தை பக்தர்கள் தரிசிக்க வசதியாக இணையதளங்களில் ஒளிபரப்ப அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. நாளை காலை 8.30 மணியில் இருந்து 10.15 வரை நிகழ்ச்சிகள் அனைத்தும் இணையதளத்தில் ஒளிபரப்பப்படும். www.tnhrce.gov.in, www.maduraimeenakshi.org/live-webcast/ என்ற இணையதளங்களில் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: